என் மலர்
செய்திகள்

ஜெய்ப்பூரில் தனியார் பேருந்து மூலம் கடத்தப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனியார் பேருந்து மூலம் கடத்தப்பட்ட ரூ.4 கோடியை பயங்கரவாத தடுப்பு குழுவினர் இன்று பறிமுதல் செய்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்க தனியார் வாகனங்கள் மூலம் பணம் கடத்தப்படுவதாக பயங்கரவாத தடுப்பு குழுவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவர்கள் வருமான வரித்துறையினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டெல்லி-அகமதாபாத் தனியார் பேருந்தில் 4 கோடி ரூபாய் அளவிலான 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் கடத்திச் செல்லப்பட்ட பணத்தை பயங்கரவாத தடுப்பு குழுவினர் இன்று கைப்பற்றினர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்க ரூ.4 கோடி கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Next Story