என் மலர்
செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 24 மணி நேரத்தில் 6 என்கவுண்டர்களில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
லக்னோ:
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிர தேசத்தின் பல இடங்களில் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது.
முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு முழு அதிகாரமும், சுதந்திரமும் வழங்கினார். இதையடுத்து உத்தரபிரதேசத்தில் ரவுடிகள், சமூக விரோதிகளின் கொட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். என்கவுண்டரும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தின் பல இடங்களில் என்கவுண்டர்கள் நடந்தது. நொய்டாவில் நடந்த என்கவுண்டரில் ஷ்ராவன் சவுத்திரி என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டான்.
இவன் டெல்லி மற்றும் நொய்டாவில் நடந்த பல கொலைகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன். அவனை பிடித்து கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட அவனிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினார்கள்.
இதேபோல் தாத்ரி என்ற இடத்தில் ஜிதேந்தர் என்ற குற்றவாளி பதுங்கி இருந்தான். இவன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை துப்பாக்கியால் சுட்டு அவர் வைத்திருந்த பையில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றான். இவனது தலைக்கு போலீசார் ரூ.25 ஆயிரம் பரிசு அறிவித்து இருந்தனர்.
நேற்று ஜிதேந்தர் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்து கைது செய்யச் சென்ற போது துப்பாக்கியால் சுட்டான். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இறுதியில் ஜிதேந்தர் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதேபோல் சோரன்பூர், காசியாபாத், முசாபர்நகர் உள்பட 4 இடங்களில் என் கவுண்டர்கள் நடந்தன. இதில் 5 குற்றவாளிகள் குண்டு காயத்துடன் பிடிபட்டார்கள். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்தரபிரதேசத்தில் 48 மணி நேரத்தில் 18 என் கவுண்டர்கள் நடந்தது. இதில் தலைக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்ட 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த என்கவுண்டரின் போது இடையே குறுக்கிட்ட 8 வயது சிறுவன் பலியானான்.






