search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை ஒரே வரியாக கொண்டு வருவோம் - ராகுல் காந்தி
    X

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை ஒரே வரியாக கொண்டு வருவோம் - ராகுல் காந்தி

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்டி.யை ஒரே வரையறைக்குள் கொண்டு வருவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.#Rahulgandhi

    பெங்களூர்:

    ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய பா.ஜனதா அரசு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி அமல்படுத்தியது.

    ஜி.எஸ்.டி. 5 நிலைகளிலும் வரையறுக்கப்பட்டு உள்ளது. 0, 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்களில் வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.யால் சிறு வியாபாரிகள் மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்டி.யை ஒரே வரையறைக்குள் கொண்டு வருவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    கர்நாடகா மாநில சட்ட சபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிர முயற்சி செய்து வருகிறார். 4-வது கட்டமாக காமராஜ்நகர், மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார். மைசூரில் கல்லூரி ஒன்றில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்தார்.

    மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம், “சிங்கப்பூரில் 7 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இலவச மருத்துவம் கொடுக்கப்படும் போது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் இந்தியாவில் அது மாதிரி வசதிகள் செய்து தரப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து ராகுல்காந்தி பேசியதாவது:-

    இந்த கேள்வியை நரேந்திர மோடியிடம் கேட்டால்தான் பொருத்தமாக இருக்கும். அவர்தான் இதற்கான பதிலை அளிக்க முடியும்.

    ஜி.எஸ்.டி., அடிப்படையிலேயே காங்கிரசின் திட்டமாகும். நாங்கள் ஜி.எஸ்.டி.யில் ஒரே வரையறை கொண்டுவர வலியுறுத்தினோம். பல்வேறு வரையறைகள் இருப்பது ஊழலை ஊக்குவிக்கும்.

    ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நாங்கள் சொன்னதை பா.ஜனதா அரசு கேட்கவில்லை.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 நிலைகளில் இருக்கும் ஜி.எஸ்.டி.யை ஒரே வரையறைக்குள் கொண்டு வருவோம். 5 நிலைகளில் இருப்பது கொள்ளை வரியாகும்.

    கருப்பு பணத்தை வெளி நாட்டில் இருந்து மீட்போம் என்று கூறிய பிரதமர் ஒன்றுமே செய்யவில்லை. ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விடும் இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #Rahulgandhi #Tamilnews

    Next Story
    ×