என் மலர்
செய்திகள்

கடன்களுக்கான அடிப்படை வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி
கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டியை 0.20 சதவிகிதம் உயர்த்தி பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வீடு, வாகன கடன்களுக்காக வட்டி உயரும் நிலை உருவாகியுள்ளது. #SBI
மும்பை:
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டியை 20 புள்ளிகள் அளவில் (0.20 சதவிகிதம்) உயர்த்தியுள்ளது. தற்போது, அது 7.95 சதவிகிதத்தில் உள்ளது. 6 மாத குறுகிய கால கடன், நீண்ட கால கடன் திட்டங்களுக்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்தும் அடிப்படை வட்டியை கொண்டே கணக்கிடப்படுவதால், அந்த வட்டி விகிதமும் உயர வாய்ப்பு உள்ளது. மாதம் தோறும் கட்டக்கூடிய தவணை தொகையும் உயரும். இதே போல, பஞ்சாப் நேஷனல் வங்கியும் கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டியை உயர்த்தியுள்ளது. #SBI #PunjabNationalBank #TamilNews

Next Story