என் மலர்
செய்திகள்

டெல்லியில் கார் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் வாலிபர் மரணம்
டெல்லியில் கார் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் துரத்தி சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். #Delhi #Youthdead #Attempttocatchthieves
புதுடெல்லி:
டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் காருடன் தப்ப முயன்ற திருடர்களை துரத்தி பிடிக்க சென்ற வாலிபர் பலியாகியுள்ளார். மேலும் இறந்தவரின் தந்தை படுகாயம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியின் ஜெய்த்பூர் பகுதியில் இரண்டு திருடர்கள் அங்கு வாகன நிறுத்தத்தில் இருந்த காரை திருட முயற்சி செய்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட விஷால் (25) என்பவர் தன் தந்தையுடன் திருடர்களை பிடிப்பதற்கு காரின் சாவியை எடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் சுதாரித்து கொண்ட திருடர்கள் காரை வேகமாக ஓட்டியதால் விஷால் மற்றும் அவரது தந்தை காருடன் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதனால் படுகாயமுற்ற இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு காயமடைந்தவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், விஷால் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் விஷாலின் தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விஷாலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Delhi #Youthdead #Attempttocatchthieves #tamilnews
Next Story