என் மலர்

  செய்திகள்

  பீகாரில் பள்ளிக்குள் வேன் புகுந்தது - 9 மாணவர்கள் பலி
  X

  பீகாரில் பள்ளிக்குள் வேன் புகுந்தது - 9 மாணவர்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகாரில் முசாபர்பூர்-ஷிவார் சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற வேன் பள்ளிக்குள் புகுந்ததில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்.
  முசாபர்பூர்:

  பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் தர்மபுரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மதியம் வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். அப்போது பிரதான சாலையில் இருந்து தாறுமாறாக வந்த வேன், பள்ளிக்குள் புகுந்தது. என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள், வேன் சக்கரத்தில் பல மாணவர்கள் சிக்கி உயிருக்குப் போராடினர்.

  உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 24 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
  Next Story
  ×