என் மலர்

  செய்திகள்

  உங்கள் மந்திரிசபையைப் போல் தகுதிக்கேற்ப பத்ம விருதுகளா?: பிரதமரை போட்டுத்தாக்கும் சத்ருகன் சின்கா
  X

  உங்கள் மந்திரிசபையைப் போல் தகுதிக்கேற்ப பத்ம விருதுகளா?: பிரதமரை போட்டுத்தாக்கும் சத்ருகன் சின்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பத்ம விருதுகளில் தற்போது வெளிப்படைத்தன்மை உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள நிலையில் உங்கள் மந்திரிசபையைப் போல் தகுதிக்கேற்ப பத்ம விருதுகளா? என நடிகர் சத்ருகன் சின்கா கிண்டலடித்துள்ளார்.#sinha #Padmaawards #pmmodi
  புதுடெல்லி:

  மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பத்ம விருதுகளுக்கான தகுதிபெற்ற நபர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் தற்போது வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

  இந்நிலையில், பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்கா, உங்கள் மந்திரிசபையைப் போல் தகுதிக்கேற்ப பத்ம விருதுகளா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’சார், பத்ம விருதுகள் தற்போது தகுதிக்கேற்ப வழங்கப்படுவதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். அந்த தகுதியானது.., உங்களுக்கு உண்மையானவர்களான அத்வானி, ஜஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்ற மிகவும் விலைமதிப்புள்ளவர்களை வெளியே கழற்றிவிட்ட உங்களது மந்திரிசபை அமைப்பைப் போன்றதா? இதற்கான பரிகாரங்கள் ஏதும் உண்டா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும், ’மான் கி பாத் என்ற பெயர் சிறப்பான ஒருவருக்கு ( மோடி) மட்டுமே சொந்தம் என்பதால் அந்த தலைப்பில் எனது மனக்குமுறலை நான் பேச முடியாது. ஆனால், எனது இதயத்தின் குரலை மட்டும் என்னால் ஒலிக்க முடியும்.

   அத்வானியை பிரதமராக்க முடியவில்லை, இதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும். அவரை மத்திய உள்துறை மந்திரியாக்க முடியவில்லை, அதற்கான காரணம் நம்மில் சிலருக்கு மட்டும் தெரியும்.

  அத்வானியை ஜனாதிபதியாக்க முடியாமல் போன காரணங்கள் என்ன? என்பதை நீங்களும் நானும் நன்றாக அறிவோம். ஆனால், இந்த ஆண்டின் பத்ம விருதுகள் பட்டியலில் அத்வானியை ‘பாரத ரத்னா’ விருதின் மூலம் நிச்சயமாக கவுரவித்திருக்கலாமே, சார். சில வேளைகளில் உங்கள் மான் கி பாத் நிகழ்ச்சியைப்போல் எனது இதயத்தின் குரல் யாரையும் காயப்படுத்தாது என நம்புகிறேன். ஜெய் ஹிந்த்!’ எனவும் சத்ருகன் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #tamilnews #sinha #Padmaawards #pmmodi
  Next Story
  ×