என் மலர்

    செய்திகள்

    மேற்கு வங்காளம்: ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
    X

    மேற்கு வங்காளம்: ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் 50-60 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று இன்று காலை தாயுலாடாபாத் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. சம்பவம் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படகுகளை பயன்படுத்தி பயணிகள் மீட்கப்பட்டனர். இவ்விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதற்கிடையே மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால் மக்கள் தீயணைப்புப்படையினர் மற்றும் போலீசாரை நோக்கி கல்லால் எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. போலீசார் கண்ணீர் குண்டுகள் மற்றும் லத்தி சார்ஜ் செய்து மக்களை கட்டுப்படுத்தினர்.

    மேலும், மாநில போக்குவரத்துத்துறை மந்திரி சுவேந்து ஆதிகாரி மற்றும் செயலாளர் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இறந்தவர் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பஸ் ஆழத்திற்கு சென்று விட்டதால் அதனை வெளியே எடுக்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×