என் மலர்

  செய்திகள்

  சத்தீஸ்கர்: பெண் உட்பட இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை
  X

  சத்தீஸ்கர்: பெண் உட்பட இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பெண் உட்பட இரண்டு நக்சல்கள் இன்று காலை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டாத்மேட்லா, மோர்பல்லி கிராமத்திற்கு இடையே உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

  சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்த நக்சல்கள் துப்பாக்கியால் இன்று காலை பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறுது நேரம் தொடர்ந்த இந்த தாக்குதலில் பெண் உட்பட இரண்டு நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

  அப்பகுதியில் பதுங்கியுள்ள மற்ற நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
  Next Story
  ×