search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
    X

    கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

    கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    திருவனந்தபுரம்:

    நூறு சதவீத கல்வியறிவு, சமூக பொருளாதார குறியீடு உயர்வு என பெருமை  பெற்ற கேரள மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. 

    கேரள காவல்துறை சமீபத்தில் வாங்கி உள்ள குற்ற புள்ளிவிவர பட்டியலின்படி கேரள மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 16755 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

    அதாவது 2007-2017 (ஜூலை வரை) காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக 11325 பாலியல் பலாத்கார வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிராக 5430 பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ன. இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 1475  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு ஜனவரி-டிசம்பர் காலகட்டத்தில் 1656 வழக்குகள் பதிவாகி உள்ளன.  இந்த புள்ளி விவரங்கள் கேரள காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த புள்ளிவிவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜீதா பேகம், ‘சமுதாயத்தின் அடிமட்ட அளவிலான விழிப்புணர்வு மட்டுமின்றி விரைவான விசாரணை, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் குற்றங்களை குறைக்க முடியும்’ என்றார். அதேபோல், குற்றம் நடந்தவுடன் தாமதமின்றி புகார் பதிவு செய்யும் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
    Next Story
    ×