என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாஜ்பாய் பிறந்தநாள்: அசாம் மாநிலத்தில் 201 ஆயுள் கைதிகளின் தண்டனை காலம் குறைப்பு
    X

    வாஜ்பாய் பிறந்தநாள்: அசாம் மாநிலத்தில் 201 ஆயுள் கைதிகளின் தண்டனை காலம் குறைப்பு

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93-வது பிறந்தநாளையொட்டி அசாம் மாநிலத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள 201 ஆயுள் கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.
    கவுகாத்தி:

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 93-வது பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து 93 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் வாஜ்பாயின் பிறந்தநாள் ‘நல்லாட்சி தினம்’ ஆக இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

    இதை தொடர்ந்து, அசாம் மாநிலத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள 201 ஆயுள் கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து (ரெமிஷன்) முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×