என் மலர்

  செய்திகள்

  சீனாவின் செயல்பாட்டால் கருப்பாக மாறி வரும் சியாங் ஆறு: மோடிக்கு காங். எம்.பி. கடிதம்
  X

  சீனாவின் செயல்பாட்டால் கருப்பாக மாறி வரும் சியாங் ஆறு: மோடிக்கு காங். எம்.பி. கடிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் பாயும் சியாங் ஆற்றில் அதிக அளவு மாசு சேர்வது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி., பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  கவுகாத்தி:

  பிரம்மப்புத்திரா ஆறானது அருணாச்சல பிரதேசத்தில் பாயும் போது சியாங் என்று அழைக்கப்படுகிறது. சமீப காலமாக இந்த ஆற்றில் அதிகப்படியான கழிவு சேர்வதால் கருப்பு நிறமாக மாறி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் அழுக்காக இருந்து வருகிறது. மழைக்காலத்திற்கு பிறகு நீரானது தூய்மையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தூய்மையாக மாற வில்லை.


  இந்நிலையில், இதற்கு காரணம் சீனா என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சீனாவிலிருந்து வரும் இந்த ஆற்றில் சீன அரசு ஆயிரம் கி.மீ. நீளத்தில் சுரங்கப்பாதை ஒன்றை அமைக்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிமெண்ட் போன்ற கெட்டியான கழிவு வருகிறது. இதனால் ஆற்றில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.   இது குறித்து அருணாச்சல் பிரதேச காங்கிரஸ் எம்.பி. நியோங் எரிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் சீன அரசு பிரம்மப்புத்திரா ஆற்றில் ஆயிரம் கி.மீ. நீளத்தில் சுரங்கப்பாதை ஒன்று கட்ட இருப்பதாக அறிவிப்பு விடுத்தது. அறிக்கை வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே சியாங் ஆறு முழுவதும்  சேறு மற்றும் சகதியாக மாறி உள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

  அக்டோபர் மாதம் இறுதியில் சியாங் ஆறு மிகவும் தூய்மையாகவும், தெளிவாகவும் இருக்கும். ஆனால் தற்போது ஆறு முழுவதும் சிமெண்ட் மற்றும் களிமண்ணாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் அனைவரும் இந்த ஆற்று நீரையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

  Next Story
  ×