என் மலர்

  செய்திகள்

  கேரளாவில் ஆட்டோவை முந்த முயன்ற கார் மின்கம்பத்தில் மோதி விபத்து - தொழிலதிபர் மகன் பலி
  X

  கேரளாவில் ஆட்டோவை முந்த முயன்ற கார் மின்கம்பத்தில் மோதி விபத்து - தொழிலதிபர் மகன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் முன்னால் சென்ற ஆட்டோவை முந்த முயன்ற கார் விபத்துக்குளானதில் தொழிலதிபர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
  திருவனந்தபுரம்:

  கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகன் அதார்ஷ் தனது புதிய ரேஸ் காரில் நேற்று இரவு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்ற ஆட்டோவை முந்த முயன்றார். மிக வேகமாக சென்றதால் கார் கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் காரானது அப்பளம் போல் நொறுங்கியது.  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காரில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை தீயணைப்பு படையினர் வந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அதார்ஷ் உடன் இருந்த 3 பெண்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்தவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர் ஐ.சி.யு.-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  இந்நிலையில், இன்று காலை அதார்ஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கின்றனர். கார் எண் இன்னும் பதிவு செய்யப்பட்டாதது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×