என் மலர்

    செய்திகள்

    சென்னையில் கைதான 3 பேரை படத்தில் காணலாம்.
    X
    சென்னையில் கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

    சென்னையில் பதுக்கிய ரூ.7 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல்: 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏர்ப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடரமணா, ஆமடுரு காப்புக்காட்டில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பதியைச் சேர்ந்த சீனிவாசலு, தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 665 கிலோ எடையிலான 21 செம்மரக் கட்டைகள், ஒரு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த கடத்தலுக்கு தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த செம்மரக் கடத்தல்காரர் அப்துல்ரசாக் என்கிற பாஷாவை திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர். கைதான அப்துல் ரசாக் கொடுத்த தகவலின் படி, சென்னை மணலியைச் சேர்ந்த செம்மரக் கடத்தல்காரர் பீடாரவி என்கிற பீடா ரபீக் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்தது.

    இதையடுத்து அந்தக் குடோனில் திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கு, பதுக்கி வைத்திருந்த ரூ.7 கோடி மதிப்பிலான 14 டன் எடை கொண்ட 595 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செம்மரக்கட்டைகளை திருப்பதிக்கு கொண்டு வந்தனர். அந்த கட்டைகள் அனைத்தும் செம்மரங்களின் வேர் பகுதியாகும்.

    அந்தக் குடோன் உரிமையாளரான கண்ணன், அவருடைய மகன் கார்த்திக் ஆகியோரை திருப்பதி போலீசார் கைது செய்தனர். கைதான அப்துல்ரசாக், கண்ணன், கார்த்திக் ஆகிய 3 பேர் மீது திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் சிலரை திருப்பதி போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பதி அர்பன் எஸ்.பி. அபிஷேக் மொஹந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சர்வதேச கடத்தல்காரனான நாகுல் மிரானை பிடிப்பது தான் நமது குறிக்கோள். அவன் துபாயில் இருக்கக்கூடும். அவனது சொந்த ஊர் சென்னை என்பதால் அவனை பிடிப்பது சுலபம்.

    கடத்தப்படும் செம்மரக்கட்டைகளை சீனா, துபாய், மலேசிய நாடுகளில் உள்ள கடத்தல்காரர்களுக்கு அனுப்பி வைப்பது இவர்களின் பணி. இந்த வேர்க்கட்டைகளை கொண்டு மாலைகள், அழகு பொருட்கள் தயார் செய்யலாம். அவற்றிற்கு சர்வதேச சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்றார்.
    Next Story
    ×