என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரா: பிளாட்பார்மில் மாடு ஓடியதால் சோதனை செய்ய வந்த எம்.பி அதிர்ச்சி
    X

    மதுரா: பிளாட்பார்மில் மாடு ஓடியதால் சோதனை செய்ய வந்த எம்.பி அதிர்ச்சி

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் பாஜக எம்.பி. ஹேமமாலினி சோதனை நடத்திய போது, பிளாட்பார்மில் மாடு ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் பாஜக எம்.பி. ஹேமமாலினி சோதனை நடத்திய போது, பிளாட்பார்மில் மாடு ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தின் நடை மேம்பாலம் கடந்த மாதம் இடிந்து விழுந்ததில் 23 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், அனைத்து எம்பிக்களும் தங்களது தொகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி ரெயில் நிலையத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். அதிகாரிகளுடன் சென்ற அவர் ரெயில் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த வசதிகளை பார்வையிட்டபடி சென்றார்.

    அப்போது, பிளாட்பார்மில் இருந்து திடீரென ஒரு மாடு ஆடி அசைந்து வருவதை கண்ட எம்.பி. அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகள் மாட்டை விரட்டினர். பயந்து ஓடிய மாட்டால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அங்குள்ள ரெயில்வே அதிகாரிகளை எம்.பி. ஹேமமாலினி கடிந்து கொண்டார். இதுபோல் நடக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டபடி அங்கிருந்து சென்றுவிட்டார்.
     
    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×