என் மலர்
செய்திகள்

பாகிஸ்தானுக்கான புதிய தூதராக அஜய் பைசாரியா நியமனம்: வெளியுறவு துறை அறிவிப்பு
பாகிஸ்தானுக்கான புதிய தூதராக அஜய் பைசாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பாகிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதராக கவுதம் பம்பேவாலா பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் சீனா நாட்டுக்கான தூதராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டுக்கான புதிய தூதராக அஜய் பைசாரியாவை நியமனம் செய்து வெளியுறவு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில், பாகிஸ்தான் நாட்டுக்கான புதிய தூதராக அஜய் பைசாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் தூதர் பொறுப்பை ஏற்கவுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
அஜய் பைசாரியா பிரதமரின் செயலாளராக 1999 முதல் 2004 வரை செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 2015 முதல் போலந்து நாட்டின் தூதராகவும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story