என் மலர்

  செய்திகள்

  பொருளாதார மந்தநிலை: மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் - சத்ருஹன் சின்கா
  X

  பொருளாதார மந்தநிலை: மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் - சத்ருஹன் சின்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய பொருளாதாரத்தில் தற்போது நிலவும் மந்தமான சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி மக்கள் மற்றும் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என பா.ஜ.க எம்.பி.யும், பிரபல நடிகருமான சத்ருஹன் சின்கா கூறியுள்ளார்.
  பாட்னா:

  இந்திய பொருளாதாத்தை நிதிமந்திரி அருண் ஜெட்லி சிதைத்து விட்டதாக பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

  யஷ்வந்த் சின்காவின் இந்த விமர்சனத்திற்கு பீகார் மாநில பா.ஜ.க எம்.பி.யும் பாலியுட் நடிகருமான சத்ருஹன் சின்கா ஆதரவு தெரிவித்திருந்தார். இரு தினங்களாக பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சத்ருஹன் சின்கா கூறியுள்ளதாவது:-

  உண்மையில் பிரதமர் மோடிக்கு நடுத்தர குடும்பத்தினர், வணிகர்கள், சிறிய தொழில்களில் ஈடுபடுபவர்கள் நாடுமுழுவதும் குறிப்பாக குஜராத் மாநில மக்கள் (விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது) மீது அக்கறை இருக்குமானால் அதை நிரூபிக்கும் நேரம் இது.

  பத்திரிக்கையாளர் கூட்டத்தை உடனடியாக கூட்டி மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நிச்சயமாக மோடி இதனை செய்வார் என நம்புகிறேன்.

  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

  பா.ஜ.க எம்.பி.யாக சத்ருஹன் சின்கா இருந்தாலும் எப்போதும் அவர் கட்சியை தொடர்ந்து விமர்சித்தே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×