என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஒடிசாவில் பெண் மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
By
மாலை மலர்11 Sep 2017 6:40 PM GMT (Updated: 11 Sep 2017 6:41 PM GMT)

ஒடிசா மாநிலம் ஹகம்ஹோல் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் தலைக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்டு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் ஹகம்ஹோல் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை பார்த்த மாவோயிஸ்டுகள் அவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே 45 நிமிட நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது.
பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் தப்பி ஒடினர். பின்னர் அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். அங்கு பெண் மாவோயிஸ்டு ஒருவர் குண்டு பாய்ந்து பிணமாக கிடந்தார். அவர் அருகில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் பிணமாக கிடந்த பெண் மாவோயிஸ்டு பெயர் பனிட்டா. இவர் சத்தீஷ்கார் மாநிலம் டார்யாங்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதியாக செயல்பட்ட இவரது தலைக்கு பாதுகாப்பு படையினர் ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் குண்டு காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Next Story
×