என் மலர்

    செய்திகள்

    ரவீந்திரநாத் தாகூர் நினைவு நாள்: மம்தா பானர்ஜி புகழாஞ்சலி
    X

    ரவீந்திரநாத் தாகூர் நினைவு நாள்: மம்தா பானர்ஜி புகழாஞ்சலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரபல வங்கமொழி கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 76-வது நினைவு நாளையொட்டி மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
    கொல்கத்தா:

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் குருதேவ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான ரவீந்திரநாத் தாகூர் 6-5-1861 அன்று கொல்கத்தாவில் பிறந்தார்.

    தனது 16-வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20-வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார். இரண்டாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதி மெட்டும் அமைத்துள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும் மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது. வங்காள இலக்கியத்தில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். 1884-ல் கோரி-ஓ-கமல் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார்.

    முப்பதுக்கும் அதிகமான வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்காக நிதி திரட்டினார். தமது பயண அனுபவங்களை யாத்ரி என்ற நூலில் எழுதியுள்ளார். வங்காளத்தின், குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை குறித்த பல கதைகளை எழுதியுள்ளார்.

    1893 முதல் 1900 வரை சோனார் தோரி, கனிகா உள்ளிட்ட ஏழு கவிதைத் தொகுப்புகளை படைத்தார். 1901-ல் பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். முதலில் தாய்மொழியான வங்காளத்தில்தான் எழுதி வந்தார். பின்னர் வங்காள மொழியில் எழுதியிருந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புதினங்கள், கதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் பலவற்றையும் இவர் படைத்துள்ளார்.

    1901-ம் ஆண்டு சாந்தி  நிகேதனில் குடியேறினார். அங்கு ஓர் ஆசிரமத்தை நிறுவினார். பிரார்த்தனை கூடம், பள்ளிக்கூடம், நூலகம், மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்த பூஞ்சோலையாக சாந்தி  நிகேதன் மிளிர்ந்தது. 1915-ல் ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1919-ல் அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.

    1909-ல் இவர் எழுதத் தொடங்கிய கீதாஞ்சலி, 1912-ல் வெளியிடப்பட்டது. இந்த கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1921-ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். தனது புத்தகங்களுக்காக கிடைத்த பணம், நோபல் பரிசு மூலம் கிடைத்த தொகை அனைத்தையும் அந்த பல்கலைக்கழகத்துக்காக செலவிட்டார்.

    60-வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கினார். கவிதைகள்-உரைநடைகள் அடங்கிய இவரது படைப்புகள் மொத்தம் பதினைந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. உயிரியியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.



    காந்திஜியை மகாத்மா என்று முதன்முதலாக அழைத்தது இவர்தான். சமூக சீர்திருத்தவாதி, இந்திய கலாசாரத்தின் அடையாளம், வங்கம் தந்த தவப்புதல்வர் என்றெல்லாம் போற்றப்படும் ரவீந்திரநாத் தாகூர் 7-8-1941 அன்று காலமானார். உலகம் முழுவதும் வாழும் வங்காளிகள் ஆண்டுதோறும் அவரது நினைவுநாளை அனுசரித்து வருகின்றனர். ஆங்கில நாட்காட்டியின்படி அவரது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரவீந்திரநாத் தாகூரின் 76-வது நினைவு நாளையொட்டி மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில், ‘வங்காளிகளின் நாட்காட்டியின்படி சிரபோன் மாதம் 22-ம் நாளான இன்று இயற்கை எய்திய கவிப்பிதாவுக்கு எனது அஞ்சலிகளை செலுத்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×