என் மலர்

  செய்திகள்

  ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய பாணியில் ஒளிரும் சீருடைகள்: விரைவில் அறிமுகம்
  X

  ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய பாணியில் ஒளிரும் சீருடைகள்: விரைவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய ரெயில்வேயில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, புதிய பாணியில் ஒளிரும் சீருடைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  புதுடெல்லி:

  இந்திய ரெயில்வேயில் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் டி.டி.இ, ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், கார்டு, டிரைவர்கள், கேட்ரிங் பிரிவினர் ஆகியோருக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய பாணியில் ஒளிரும் சீருடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  அதன்படி, ரெயில்வே அலுவலக ஊழியர்களுக்கு கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான டி-சர்ட்களும், கேட்டரிங் பிரிவு ஊழியர்களுக்கு வெள்ளை நிறத்தில் கறுப்பு கோடு போட்ட டி-சர்ட்களும், டி.டி.இ.க்கள், கார்டுகள் மற்றும் டிரைவர்களுக்கு ஒளிரும் நிறங்களில் இரு விதமான சீருடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘’ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இந்த சீருடைகள் அறிமுகம் செய்யப்படும். அதை தொடர்ந்து, மற்ற ரெயில்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்’’ என தெரிவித்தனர்.
  Next Story
  ×