என் மலர்

  செய்திகள்

  வெளிநாட்டு பயணம் முடித்து ராகுல் காந்தி நாடு திரும்பினார்
  X

  வெளிநாட்டு பயணம் முடித்து ராகுல் காந்தி நாடு திரும்பினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விடுமுறை மற்றும் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு காங்கிரஸ் துணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நாடு திரும்பினார்.
  புதுடெல்லி:

  காங்கிரஸ் துணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது தாய்வழி பாட்டியை பார்ப்பதற்காக இத்தாலி சென்றிருந்தார். இதற்காக கடந்த மாதம் 13-ந் தேதி புறப்பட்டு சென்ற அவர், இத்தாலியில் தனது பாட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்தார்.

  இந்த பயணத்தின் இடையிலேயே தனது பிறந்த நாளையும் கடந்த 19-ந் தேதி கொண்டாடினார். இந்த விடுமுறை மற்றும் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் நாடு திரும்பினார். டெல்லி வந்துள்ள அவர் தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

  Next Story
  ×