என் மலர்

  செய்திகள்

  துருக்கி அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு - பிரதமருடன் ஆலோசனை
  X

  துருக்கி அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு - பிரதமருடன் ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகனுக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  புதுடெல்லி:

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகனுக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர் பிரதமருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

  துருக்கி நாட்டு அதிபருக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்காக அந்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தய்யிப் எர்டோகன் தனது மனைவி எமி எர்டோகன் மற்றும் துருக்கி நாட்டு முக்கிய மந்திரிகள், உயரதிகாரிகள் என சுமார் 150 பேர் அடங்கிய குழுவினருடன் இந்தியா வந்துள்ளார்.

  இந்நிலையில்,  இன்று காலை டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தய்யிப் எர்டோகனுக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுகொண்ட அவர் டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  பின்னர், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். இன்று பிற்பகல் வரை நிடித்த இந்த சந்திப்பில் இந்தியா - துருக்கி இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பல்கப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×