என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
யுபிஎஸ்சி தேர்வில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு இளம்பெண்கள் தேர்ச்சி- ஒரே ரேங்க் எடுத்ததால் குழப்பம்
- பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது.
- மக்ராணியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆயஷா பாத்திமா (23) மற்றும் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆயஷா மக்ராணி (26). இருவரும் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இதில் ஆயஷா பாத்திமாவும், ஆயஷா மக்ராணியும் ஒரே பதிவு எண்ணுடன் ஒரே ரேங்க்கில் (184வது ரேங்க்) தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி இருந்தது. இரண்டு பெண்களுக்கும் ஒரே எண், ஒரே முன் பெயர், ஒரே ரேங்க் இருக்கும்பட்சத்தில் அந்த 184வது ரேங்க் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வியும் எழுந்தது.
இதையடுத்து, சுமார் 200 கி.மீ இடைவெளியில் வசிக்கும் இரண்டு பெண்களும் தங்களின் அட்மிட் கார்டுடன் உள்ளூர் காவல்துறையில் யுபிஎஸ்சி மோசடி செய்துள்ளதாகக் கூறி விளக்கம் கேட்டு புகார் அளித்தனர்.
இருவரும் தங்களது அட்மிட் கார்டுகளை சமர்ப்பித்தனர். அதில், இருவருக்கும் ஒரே பதிவு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், மக்ரானியின் அட்மிட் கார்டில், ஆளுமைத் தேர்வின் தேதி ஏப்ரல் 25 (வியாழன்) என்றும், பாத்திமாவின் தேதியில் ஏப்ரல் 25 (செவ்வாய்கிழமை) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது. அதே சமயம் மக்ரானியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.
இந்நிலையில், தீவிர ஆவண சரிபார்ப்புக்கு பிறகு 184வது ரேங்க் ஆயஷா பாத்திமாவுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இது போன்ற தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று யுபிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.