search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு- 1,717 வேட்பாளர்கள் போட்டி
    X

    4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு- 1,717 வேட்பாளர்கள் போட்டி

    • உத்தரபிரதேசத்தில் 130 வேட்பாளர்களும், மராட்டியத்தில் 298 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 74 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
    • இன்னும் 163 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    2-ம் கட்டமாக கேரளா உள்பட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடந்தது. 3-ம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடந்தது.

    இதுவரை நடந்து முடிந்து உள்ள 3 கட்ட தேர்தல்களிலும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால், அந்த இடத்தை தவிர மற்ற 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.

    இந்த நிலையில் 4-ம் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 9 மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளுக்கு நாளை 4-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகள், தெலுங்கானா வில் உள்ள 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகள், மராட்டியத்தில் உள்ள 11 தொகுதிகள், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகு திகள், பீகாரில் 5 தொகுதிகள், ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் தலா 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகிய தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடத்தப்படு கிறது.

    நாளை தேர்தலை சந்திப்பவர்களில் முக்கிய வேட்பா ளர்களாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியிலும், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா தொகுதி யிலும், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ் வரி ராஜ மகேந்திரவரம் தொகுதியிலும், மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுச ராய் தொகுதியிலும், மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி தொகுதியிலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்காள மாநிலம் பஹரம்பூர் தொகுதி யிலும், நடிகர் சத்ருகன் சின்கா மேற்கு வங்காள மாநி லம் அசன்சோல் தொகுதியிலும், நடிகை மாதவி லதா ஐதராபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் 170 பெண்கள் உள்பட மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் 130 வேட்பாளர்களும், மராட்டியத்தில் 298 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 74 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

    நாளை 4-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. 96 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத் தொகுதியை தவிர தேர்தல் நடக்கும் 542 தொகுதிகளிலும் 4 கட்ட தேர்தல்களையும் சேர்த்து மொத்தம் 379 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

    இன்னும் 163 தொகுதி களில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. 5-ம் கட்டமாக மே 20-ந்தேதி 49 தொகுதிகளுக்கும், 6-ம் கட்டமாக மே 25-ந்தேதி 57 தொகுதிகளுக்கும், 7-ம் கட்டமாக ஜூன் 1-ந்தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    Next Story
    ×