என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் சோகம் - லாரி மீது கார் மோதியதில் குழந்தை உள்பட 10 பேர் பலி
    X

    சாலை விபத்து

    ராஜஸ்தானில் சோகம் - லாரி மீது கார் மோதியதில் குழந்தை உள்பட 10 பேர் பலி

    • ராஜஸ்தானில் வேகமாகச் சென்ற சொகுசு கார் லாரி மீது மோதிய விபத்து ஏற்பட்டது.
    • இதில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் சோமு நகரைச் சேர்ந்த சிலர் சொகுசு காரில் கண்டேலா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

    அந்த சொகுசு கார் பல்சானா - கண்டேலா சாலையில் மாஜி சாஹப் கி தானி என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது.

    அப்போது அங்கு சென்ற பைக் மீதும், எதிரே வந்த லாரி மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற தம்பதி மற்றும் சொகுசு காரில் சென்ற ஒன்றரை வயது குழந்தை உள்பட 8 பேர் என மொத்தம் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடனே மீட்புப் பணிகளில் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×