search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட் விலையில் யு யுரேக்கா பிளாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    பட்ஜெட் விலையில் யு யுரேக்கா பிளாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    இந்தியாவில் யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள யு யுரேகா பிளாக் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் தனது யு யுரேகா பிளாக் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் 2015-இல் வெளியிட்ட யு யுரேகா ஸ்மார்ட்போனிற்கு அடுத்த மாடலாக யு யுரேகா பிளாக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய யு யுரேகா பிளாக் ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 6-ந்தேதி முதல் துவங்கும் என்றும் இது பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் யு யுரேகா பிளாக் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது.



    யு யுரேகா பிளாக் சிறப்பம்சங்கள்:

    * 5.0 இன்ச் டிஸ்ப்ளே 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன்
    * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
    * 4 ஜிபி ரேம்
    * 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    * 13 எம்பி பிரைமரி கேமரா
    * 8 எம்பி செல்ஃபி கேமரா
    * 3000 எம்ஏஎச் பேட்டரி
    * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    * கைரேகை ஸ்கேனர்

    பல்வேறு ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்களை கொண்டுள்ள யு யுரேகா பிளாக் கொண்டு முழு திரையை ஸ்கிரீன் ஷாட் எடுத்தல், ஒற்றை கையில் வசதியாய் பயன்படுத்துவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்திய சந்தையில் ரூ.8,999 என்ற விலையில் விற்பனைக்கு வரயிருக்கும் யு யுரேகா பிளாக், இந்தியாவில் ஏற்கனவே மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் சீன நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×