என் மலர்
கதம்பம்

தூங்காதே தம்பி தூங்தாதே...
- ஏதாவது ஒரு பாடலை இயற்றி தானே மெட்டமைத்து, பெஞ்ச்சிலோ, தீப்பெட்டியிலோ தாளம் போட்டுக்கொண்டு பாடுவாராம்.
- எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற, அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அழியாத மிகப்பிரபலமான “தூங்காதே தம்பி தூங்காதே” பாடல்.
அப்போது சென்னை மைலாப்பூரில் தங்கியிருந்த காமெடி ஏ.வீரப்பன் அறைக்கு அடிக்கடி போவாராம் பட்டுக்கோட்டையார். சில சமயம் இரவில் அங்கேயே தங்கிவிடுவது உண்டாம்.
ஆனால் கவிஞர் எப்பொழுதும் அதிகாலையில் எழுந்துவிடுவாராம். எழுந்து ஏதாவது ஒரு பாடலை இயற்றி தானே மெட்டமைத்து, பெஞ்ச்சிலோ, தீப்பெட்டியிலோ தாளம் போட்டுக்கொண்டு பாடுவாராம்.
ஆனால் அங்கு தங்கியிருக்கும் வேறு சில நண்பர்கள் பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் தூங்கிக் கொண்டு இருப்பார்களாம். அப்படி ஒருநாளில் இதைப் பார்த்த வீரப்பன்,தமாஷாக
"தூங்காதீங்க தம்பிகளா தூங்காதீங்க...
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக்
கெடுத்து இப்படி சோம்பேறி ஆகாதீங்க "
என எதார்த்தமாகச் சொன்னாராம்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த கவிஞர், "மாப்ள! ஒரு பாட்டுக்கு பல்லவி கிடைக்காம திண்டாடிட்டு இருந்தேன். அருமையான பல்லவியைக் கொடுத்து விட்டீங்க"என்று கூறி, அப்பொழுதே பாடலை எழுதி அதற்கு மெட்டமைத்து, தாளம் போட்டுக்கொண்டே பாடினாராம்.
அதுதான் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற, அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அழியாத மிகப்பிரபலமான "தூங்காதே தம்பி தூங்காதே" பாடல்.
-பரதன் வெங்கட்






