என் மலர்
கதம்பம்

அண்ணலும் ஆடும்
- நான் தீவிர சைவன். புலால் உண்பதில்லையே என்றார்.
- சரி எனக்கு சில காய்கறிகள் வாங்கித் தாருங்கள். நானே சமைத்துக் கொள்கிறேன் என்றார் காந்தி.
ஒரு முறை ஒரு விழாக்குழுவினர் அழைப்பை ஏற்று அண்ணல் காந்தியடிகள் மங்கோலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்! மதிய உணவு நேரத்தில் விதவிதமான சிக்கன் மீன் வகைகள் சூடாகப் பரிமாறப்பட்டன. அண்ணல் திகைத்தார். நான் தீவிர சைவன். புலால் உண்பதில்லையே என்றார்.
திகைத்து போன விழாக்குழுவினர்.."பாபுஜி மங்கோலியாவில் சைவம் என்பதே கிடையாது. இங்கே போய் சைவம் என்றால்.. என இழுக்க, அப்படியா சரி.. சைவம் சமைக்கத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்றார். இல்லை அய்யா சைவம் சமைப்பவர்க்கு இந்நாட்டில் வேலையே இல்லை என்றனர்.
சரி எனக்கு சில காய்கறிகள் வாங்கித் தாருங்கள். நானே சமைத்துக் கொள்கிறேன் என்றார் காந்தி. "பாபுபுபுபுஜிஜிஜி" அலறிவிட்டார்கள் விழாக்குழுவினர். மங்கோலிய நாட்டு சட்டப்படி விருந்தினர்களை சமைக்க வைப்பது தேசத் துரோகம் ஆகும் என்றனர்.
செய்வதறியாது அனைவரும் திகைக்க காந்திஜியே ஒரு முடிவுக்கு வந்தார். சரி நண்பர்களே நல்ல ஆடாக ஒன்றை கொண்டு வாருங்கள். அந்த ஆடு ஒரு பெட்டை ஆடாக இருக்க வேண்டும் என்றார்.
ஆட்டை வைத்து என்ன செய்யப்போகிறார் என குழம்பிய விழாக் குழுவினர் அவர் சொன்னபடி ஒரு பெட்டை ஆட்டை கொண்டு வந்தனர். காந்தியடிகள் திருப்தியானார். யாராவது ஒரு குவளை தரமுடியுமா என்றார். குவளையும் வந்தது. சட்டென்று அதன் காலருகே அமர்ந்து ஆட்டின் மடியில் இருந்து அண்ணலே பாலைக் கறந்தார்.! பாத்திரம் நிறைந்ததும் அப்படியே அதைக் குடித்து தன் பசியைப் போக்கினார்.
அசைவம் மட்டுமே கிடைக்கும் நாட்டில் சமயோஜிதமாக செயல்பட்டு தன் கொள்கையையும் விட்டுவிடாமல் தன் பசியைப் போக்கிக் கொண்ட பாபுஜியை மங்கோலியர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள். இந்த மங்கோலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு தான் அண்ணல் காந்திக்கு பிடித்த உணவாக ஆட்டுப்பால் மாறியது என்பது "நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்".!
- வெங்கடேஷ் ஆறுமுகம்






