search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
    X
    பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

    தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

    தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பதாகும். இஸ்லாமிய காலண்டரில் 9வது மாதம் ரமலான் மாதம் ஆகும்.

    ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் கடந்த மாதம் 3ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு நேற்றுடன் முடிவடைந்தது.

    இன்று ரம்ஜான் பண்டி கையை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். த.மு.மு.க. சார்பில் இந்த தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடைபெற்ற தொழுகை யிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    இதேபோன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ரம்ஜான் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    மற்ற மதத்தினரும் தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரித்த்துக் கொண்டனர்.

    ரம்ஜான் தொழுகையை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் பள்ளிவாசல்கள் இருக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பள்ளிவாசல்களின் அருகிலும், பள்ளிவாசல்கள் இருக்கும் சாலைகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    இதேபோன்று ஆவடி, தாம்பரம் பகுதிகளிலும் தொழுகை நடைபெற்ற இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. வீடுகளிலேயே தொழுகை நடைபெற்றது.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பா டுகள் விலகி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றதால் இஸ்லாமியர்கள் 2 ஆண்டு களுக்கு பிறகு மிகுந்த உற்சாகத்தோடு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    Next Story
    ×