search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் காளான் பறிக்க சென்ற 2 பெண்களை கொன்றது எப்படி? புதிய தகவல்கள்
    X

    ஜெயங்கொண்டத்தில் காளான் பறிக்க சென்ற 2 பெண்களை கொன்றது எப்படி? புதிய தகவல்கள்

    • மலர்விழி, கண்ணகி. ஆகியோர் காளான் பறிக்க சென்ற போது கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
    • இந்த கொடூர கொலை சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலர்விழி, கண்ணகி. இவர்கள் இரண்டு பேரும் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வழக்கமாக காளான் பறிக்க செல்வது வழக்கம்.

    அதேபோன்று கடந்த 22 ஆம் தேதி அதிகாலையில் காளான் பறிக்க சென்ற போது இரண்டு பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர கொலை சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நபர் தான் கொலையாளி என்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 39) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் இரண்டு பெண்களையும் தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அப்போது பால்ராஜ் தான் வழக்கமாக அதிகாலை நேரங்களில் காட்டுப்பன்றி வேட்டைக்கு செல்வதாகவும், அப்போது கடந்த சில நாட்களாக இந்த 2 பெண்களும் காளான் பறிக்க வருவதை நோட்டம் கண்டதாகவும், அவர்களின் நகைகளை பறிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

    சம்பவத்தன்று புதருக்குள் அசைவு கேட்டதால் தனது நாட்டு துப்பாக்கியால் அந்த பகுதியை நோக்கி சுட்டதாகவும், அப்போது கண்ணகியின் தொடையில் குண்டு பாய்ந்து அலறியுள்ளார். இந்த நிலையில் அருகே காளான் பறித்துக் கொண்டிருந்த மலர்விழி அங்கிருந்து ஓடி வந்து பால்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த பால்ராஜ் துப்பாக்கியை பின்பக்கமாக திருப்பி கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இந்த நிலையில் கண்ணகி தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி சுவிட்ச்ஆப் செய்து விட்டு அவரை தான் வைத்திருந்த சூரி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மலர்விழி அணிந்து இருந்த 6½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு காரைக்கால் தப்பிச் சென்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து தாலிச் சங்கிலி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சூரிக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பால்ராஜை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபடுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×