search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி  70.90 சதவீத வாக்குப்பதிவு
    X

    தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு

    தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 
     
    இதற்கிடையே, இரவு 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

    “ 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் முழுமையான தகவல் பிறகு அறிவிக்கப்படும். தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. வாக்குச்சாவடியை கைப்பற்றிய சம்பவங்கள் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெற்றது” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

    6 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக  வாக்கு சதவீதம் வருமாறு:

    வடசென்னை 61.46%, தென்சென்னை 58.14%, மத்திய சென்னை 57.05%, ஸ்ரீபெரும்புதூர் 60.39% நெல்லை 65.78%, கடலூர் 72.51%  பொள்ளாச்சி 69.81% சேலம் 72.73%, தென்காசி 70.39% திருவண்ணாமலை 69.84% தர்மபுரி 73.45%, விழுப்புரம் 72.50% கன்னியாகுமரி 65.55%, தூத்துக்குடி 69.31% காஞ்சிபுரம் 67.52%  அரக்கோணம் 72.86% கள்ளக்குறிச்சி 75.18% தஞ்சாவூர் 70.53%, திண்டுக்கல் 70.40%

    மயிலாடுதுறை 71.20%, நீலகிரி 69.74%, சிவகங்கை 70.48%, தேனி 74.57%, 
    ராமநாதபுரம் 67.70% பெரம்பலூர் 74.67%, கிருஷ்ணகிரி 72.79% திருச்சி 71.12%, விருதுநகர் 70.38%, கரூர் 75.84%, திருவள்ளூர் 70.46  ஆரணி 75.08% மதுரை 62% கோவை 63.81% நாகை 75.42% திருப்பூர் 63.18% சிதம்பரம் 76.07%
    நாமக்கல் 78% ஈரோடு 71.10%

    இதேபோல், 18 தொகுதி இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்:

    பூந்தமல்லி-79.14%, பெரம்பூர்-61.06%, திருப்போரூர் - 81.05%, சோளிங்கர் - 79.63%, குடியாத்தம் - 81.79%, ஆம்பூர் - 76.35%, ஓசூர் - 71.29%, பாப்பிரெட்டிப்பட்டி - 83.31%, அரூர் - 86.96%, நிலக்கோட்டை - 85.50%  

    திருவாரூர் - 77.38%, தஞ்சாவூர் - 66.10%, மானாமதுரை - 71.22%, ஆண்டிப்பட்டி - 75.19%, பெரியகுளம் - 64.89%, சாத்தூர் - 60.87%, பரமக்குடி - 71.69%, விளாத்திக்குளம் - 78.06%. #LokSabhaElections2019 #TNElections2019 #VoterTurnout 
    Next Story
    ×