என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதகை அருகே ஓபிஎஸ் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து
    X

    உதகை அருகே ஓபிஎஸ் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து

    உதகை அருகே கூடலூரில் பிரசாரத்திற்காக வந்த துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #ADMKCarAccident
    உதகை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம் இன்று உதகையில் இருந்து பிரசாரம் மேற்கொள்வதற்காக அவரது வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது நடுவட்டம் பகுதியில் சென்றபோது திடீரென யாரும் எதிர்ப்பாராத விதமாக கட்டுப்பாட்டினை இழந்த வாகனம்  சாலையோரம் கவிழ்ந்தது.



    பிரசார வாகனத்தில் துணை முதல் மந்திரி ஓ.பன்னீர் செல்வம் பயணிக்கவில்லை.  இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ADMKCarAccident

    Next Story
    ×