என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாசர்பாடியில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பிரசாரம்
    X

    வியாசர்பாடியில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பிரசாரம்

    வியாசர்பாடியில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வீதி, வீதியாக, வீடு, வீடாக, நடந்து சென்று தீவிர வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019

    ராயபுரம்:

    வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே உள்ள கணேசபுரத்தில் (45-வது மேற்கு வட்டம்) பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வீதி, வீதியாக, வீடு, வீடாக, நடந்து சென்று தீவிர வாக்கு சேகரித்தார். முன்னதாக கணநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் பிரார்த்தனை செய்து வழிபட்டார்.

    தொடர்ந்து சுந்தரம் மெயின் ரோடு, சுந்தரம் பவர் லைன், பாலகிருஷ்ணா தெரு, ரத்தினம் தெரு, தேசிகானந்தம் புரம் 1,2, தெரு, சுந்தரம் லைன் 3,4,5,6, தெரு, மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் ஓ.பி.லைன், எம்.எம்.கார்டன், ஸ்டீபன் சாலை, அவ்வை நகர், சாந்தி நகர் பி-டி குவாட்டர்ஸ், பி.பி.ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரித்தார். அவருடன் மா.ஜெயபிரகாசம், ஜெ.கே.ரமேஷ், வட்ட செயலாளர் வி.கோபிநாத், டி.ஒய்.கே.செந்தில்குமார், எஸ்.சீனிவாசன், இ.வேலு மேஸ்திரி, வி.எஸ்.சாமுண்டீஸ்வரி, எல்.நடராஜன், மற்றும் மகளிரணியினர் தோழமை கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    Next Story
    ×