என் மலர்
செய்திகள்

உடல்நலக் குறைவால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்தார் முதல்வர்
உடல்நலக் குறைவு காரணமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #LokSabhaElections2019
சென்னை:

இன்று காலை மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமி காலை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சென்னை தொகுதியில் முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #LokSabhaElections2019
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் பழனிசாமி, கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சாம் பால்

Next Story