என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் மண்டல அளவிலான கண்காட்சி:  மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள்   விற்பனைக்கு பதிவு செய்ய அழைப்பு
    X

    சென்னையில் மண்டல அளவிலான கண்காட்சி: மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு பதிவு செய்ய அழைப்பு

    • அனைத்து மாநில சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் மண்டல அளவிலான விற்பனை கண்காட்சி (மதி சாராஸ் மேளா) நடைபெற உள்ளது.
    • 1-ந் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 3-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை அனைத்து மாநில சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் மண்டல அளவிலான விற்பனை கண்காட்சி (மதி சாராஸ் மேளா) நடைபெற உள்ளது.

    எனவே இந்த மண்டல அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்த விவரங்கள் மற்றும் பொருளின் மாதிரியுடன் வரும் 1-ந் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவற்றில் தரமுள்ள பொருட்களை தயார் செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு சேலம் கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் 207-ம் எண் அறையில் உள்ள மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×