என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீஸ்காரை தாக்கிய வாலிபர் கைது
  X

  போலீஸ்காரை தாக்கிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் விக்னேஷ் என்பவரை கைது செய்தனர்.
  • அண்ணாமலை தலைமறைவாகியுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த். இவர் அப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தார்.

  அப்போது இவருக்கு தீர்த்தமலை அரசு மதுபான கடையில் 10 மது பாட்டில்கள் இலவசமாக தருமாறு தகராறு செய்வதாக போன் கால் வந்தது.

  உடனே சம்பவ இடத்திற்கு சென்ற ஆனந்த் தகறாறு செய்த அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (26), பூபேஷ் என்கிற அண்ணாமலை (28) ஆகிய இருவரையும் விசாரித்தார்.

  இதில் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் கன்னத்தில் அடித்தனர். இதில் காயமடைந்த ஆனந்த் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். அண்ணாமலை தலைமறைவாகியுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×