என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
- ஊத்துமலை பகுதிகளில் இரவு நேரத்தில் கடை, வீடு உடைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முகமது நசீர் என்பவர் ஈடுபட்டார்.
- 300 வருட பழமையான ஐம்பொன் சிலை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளும் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
ஆலங்குளம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களான ஆலங்குளம், கடையம், பாவூர்சத்திரம் மற்றும் ஊத்துமலை பகுதிகளில் இரவு நேரத்தில் கடை, வீடு உடைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முகமது நசீர்(வயது 30) என்பவர் ஈடுபட்டார்.
மேலும் அவர் மீது 300 வருட பழமையான ஐம்பொன் சிலை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளும் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடையம் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதால், மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் முகமது நசீரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story