என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஆண்டிப்பட்டி அருகே வாலிபர் தற்கொலை
- படிப்பில் நாட்டம் இல்லாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே கண்டமனூரை சேர்ந்தவர் மணி மகன் அபினேஷ்(20). இவர் சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வந்தார். பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார்.
அவரது பெற்றோர் படிக்க செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் படிப்பில் நாட்டம் இல்லாததால் விஷம் குடித்து மயங்கினார்.
தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






