என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய தமிழ் திறனறிவு தேர்வு விடை குறிப்பு வெளியீடு
  X

  சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய தமிழ் திறனறிவு தேர்வு விடை குறிப்பு வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிளஸ்-1 மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு தமிழக அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த தேர்வை அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த பிளஸ்-1 மாணவ- மாணவிகள் எழுதலாம்.

  சேலம்:

  சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள், சி.பி.எஸ்.இ., மற்றும் இன்டர்நேசனல் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் பிளஸ்-1 படித்து வருகிறார்கள்.

  தேர்வு

  இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு தமிழக அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வை அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த பிளஸ்-1 மாணவ- மாணவிகள் எழுதலாம்.

  இதில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். அதன்படி இந்த தேர்வு கடந்த 15-ந்தேதி ஓ.எம்.ஆர். சீட் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் சேலம், நாமக்கல்லை சேர்ந்த மாணவ-மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர். குறிப்பாக மாநிலம் முழுவதும் 6,250 மையங்களில் 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

  விடை குறிப்பு வெளியீடு

  இதற்கான உத்தேச விடைக்குறிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. இதையடுத்து மாணவ- மாணவிகள் அந்த விடைக்குறிப்பை ஆர்வத்துடன் பார்த்து தாங்கள் எழுதிய விடை சரியாக உள்ளதா? என சரிபார்த்து வருகின்றனர். வெளியிடப்பட்ட இந்த உத்தேச விடையில் ஏதேனும் தவறாக இருந்தால் அதுபற்றி வருகிற 25-ந்தேதிக்குள் உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

  Next Story
  ×