என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகா தின கொண்டாட்டம்
    X

    மாணவர்கள் யோகாசனம் செய்த காட்சி.

    ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகா தின கொண்டாட்டம்

    • மாணவ-மாணவிகள் மூச்சுப் பயிற்சி, பத்மாசனம், சூரிய நமஸ்காரம் போன்ற ஆசனங்களை செய்தனர்.
    • யோகா பயிற்சி செய்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சியாளர் மாதவி மூலம் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மூச்சுப் பயிற்சி, பத்மாசனம், சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், சசங்காசனம், தனுராசனம், தடாசனம், சக்கராசனம், யோகமுத்திரா, புஜங்காசனம் போன்ற ஆசனங்களை செய்தனர்.

    உலக யோகா தினத்தில் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் யோகா செய்வதின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா செய்திருந்தார்.

    Next Story
    ×