என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
    X

    தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

    • ராமதாஸ் கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு, மேற்கு தெருவை சேர்ந்த வர் ராமதாஸ் (34), கூலித் தொழிலாளி.இவரது மனைவி அனுசுயா (34).

    ராமதாஸ் கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். எனினும் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

    இந்த நிலையில் ராமதாஸ் வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள விட்டத்தில் துணியால் தூக்கு போட்டு உயிருக்கு போராடினார்.இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் ராமதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை சவக்கி டங்கில் வைத்து சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×