search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமைத் தொகை: தேனி மாவட்டத்தில் நாளை முதல் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
    X

    கோப்பு படம்

    மகளிர் உரிமைத் தொகை: தேனி மாவட்டத்தில் நாளை முதல் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்

    • 2ம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
    • ரேசன் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு முதற்கட்ட முகாம் பெரிய குளம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்றது. நாளை முதல் 2ம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை ரேசன் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

    விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டு முழுமை யாக பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப ப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு, டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் விண்ணப்ப ங்களை எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண அட்டை, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.

    ஆண்டிபட்டி வருவாய் வட்டத்தில் ஆண்டிபட்டி பிட் 1, 2 பாலகோம்பை உள்பட கிராமங்களில் நடைபெறுகிறது. போடி வருவாய் வட்டத்தில் அகமலை, பி.அம்மாபட்டி உள்பட 15 கிராமங்களில் நடைபெற உள்ளது. தேனி வருவாய் கோட்டத்தில்அல்லிநகரம், கோவிந்தநகரம் உள்பட 12 கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×