என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை மறைமாவட்ட பொன்விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக பெண்கள் மாநாடு- அமைச்சர் கீதாஜீவன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    பெண்கள் மாநாட்டில் அமைச்சர் கீதாஜீவன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பாளை மறைமாவட்ட பொன்விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக பெண்கள் மாநாடு- அமைச்சர் கீதாஜீவன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • சாதனைப் பெண்கள் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
    • மாநாட்டுப்பாடல்களும் பெண் எழுச்சி பாடல்களும் பெண்கள் அனைவரும் இணைந்து பாடினார்கள்.

    நெல்லை:

    பாளை மறைமாவட்ட பொன்விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக பெண்கள் மாநாடு பாளை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடைபெற்றது.

    விருதுகள்

    பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்புரையாற்றினார். "பெண்களின் நல வாழ்வு திரு அவையின் நிறை வாழ்வு" என்ற மைய செய்தியை அகில இந்திய பெண்கள் பணிக்குழு செயலாளர் லிட்வின் வழங்கினார்.

    சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து அறிவியல் அறிஞர் கோமதி விளக்கி பேசினார். மேலும் சாதனைப் பெண்கள் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    திரு அவையிலும், சமூகத்திலும் பெண்களின் தலைமைத்துவம் குறித்து மறை மாவட்ட பெண்கள் பணிக்குழு செயலாளர் அமலி அமலதாஸ் விளக்க உரையாற்றினார். பெண்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மாநாட்டுப்பாடல்களும் ,விழிப்புணர்வு பாடல் களும், பெண் எழுச்சி பாடல்களும் பெண்கள் அனைவரும் இணைந்து பாடினார்கள். தூய சவேரியார் கலை மனை களின் அதிபர் ஹென்றி ஜெரோம் சமூகத்தில் பெண்களின் சிறப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். நிகழ்ச்சிகளை ஜனதா, ஸ்டெல்லா தொகுத்து வழங்கினர்.

    ஏற்பாடுகளை பாளை மறை மாவட்டத்தின் பெண்கள் பணிக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் முதன்மை குரு குழந்தை ராஜ் அடிகளார், பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×