என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை
    X

    கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை

    • கொரலம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள கொரலம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவல கம் முன்பு முற்றுகை போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில்,

    கடந்த 1 மாதமாக எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வரவில்லை. ஒரு குடம் ரூ.5க்கு விலை கொடுத்து வாங்கி வந்தோம். அந்த தண்ணீரும் சரிவர கிடைப்ப தில்லை. பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை கேட்டும் முறையான பதில் அளிக்கவில்லை. தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் தண்ணீர் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.

    மேல்நிலை தொட்டிக்கு செல்லும் பைப் லைன் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ரெட்டியார்சத்திரம் யூனியனில் தகவல் தெரி வித்தும் எங்கள் பிரச்சி னைக்கு தீர்வு காணவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

    இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

    Next Story
    ×