என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை
- குடும்ப பிரச்சினையில் மனஉளைச்சலில் இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி கவுதமி (வயது27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணசாமி மது குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் பிரச்சினை செய்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கவுதமி விஷம் குடித்து மயங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமியும் விஷம் குடித்துள்ளார். 2 பேரையும் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதமி உயிரிழந்தார். கிருஷ்ணசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி கருப்பாயம்மாள் (56). பால் பண்ணை வைத்து நடத்தி வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த கருப்பாயம்மாள் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






