என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்- வாலிபர் கைது
    X

    கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்- வாலிபர் கைது

    • வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என கத்தியை காட்டியும் மிரட்டியுள்ளார்.
    • தப்பி ஓடிய மணிகண்டன் அப்பகுதி சவுக்கு காட்டில் பதுங்கி இருந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த காதர் மனைவி சரளா, வயது 55. நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தர்காவில் தங்கியிருந்தபோது மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் வயது 21, இவர் சரளாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

    வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என கத்தியை காட்டியும் மிரட்டியுள்ளார்.

    சரளாவின் சத்தம் கேட்டு தர்காவில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். தப்பி ஓடிய மணிகண்டன் அப்பகுதி சவுக்கு காட்டில் பதுங்கி இருந்தார். அவரை பிடித்து மாமல்லபுரம் போலீசாரிடம் ஒப்படைந்தனர். போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×