என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற பெண் கைது
- கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை புலியகுளம் சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1Ð கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த புவனா என்ற புவனேஸ்வரி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story