search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனுக்களை வழங்கிய 15 நாட்களுக்குள்  20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்  -கலெக்டர் சாந்தி வழங்கினார்
    X

    மாம்பாடி கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    மனுக்களை வழங்கிய 15 நாட்களுக்குள் 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் -கலெக்டர் சாந்தி வழங்கினார்

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 423 மனுக்கள் வரப்பெற்றன.கடந்த 31.10.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கலெக்டரிடம் அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார்.

    இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அரூர் வருவாய் வட்டாட்சியரிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தர விட்டார்.

    மாவட்ட கலெக்டர் உத்தர வின்படி, இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தகுதியுள்ள 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை வழங்கிய 15 நாட்களுக்கு ள்ளாகவே, இக்குறுகிய காலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

    மேலும், இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், தருமபுரி மாவட்ட வருவாய் அலகு, காரிமங்கலம் வட்டம், பன்னிகுளம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த காளியப்பன் என்பவர் பணியிடையில் மரணமடைந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரான அவரது மகன் அரிதாஸ் என்பவருக்கு தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தின் பதிவுறு எழுத்தர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவு ஆணையினையும் வழங்கினார்.

    Next Story
    ×