search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • இந்த திட்டம் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
    • இந்த திட்டத்தில் விண்ணப்பித்து குடியிருப்புகளை பெற தகுதியான நபர்கள் நினைத்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவரு க்கும் வீடு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப் பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன . இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்ப வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவு பங்கீடு அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து வல்லம் அய்யனார் கோவில் திட்ட பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துபட்டது.

    ஆனால் இதற்கான காலக்கெடு கடந்த 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்பு றங்களில் வசிப்பவர்களில் பல தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்க முடியாமல் போனது.

    இது குறித்து நகர்ப்புற ங்களில் வசிக்கும் பொதும க்கள் கூறும்போது:- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் திட்டம் ஒரு உன்னதமான திட்டமாகும்.

    இந்த திட்டம் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் , ஆதரவற்ற விதவைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 6-ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்து விட்டது. இதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பலரால் விண்ணப்பிக்க இயலவி ல்லை. தற்போதைய காலத்தில் வீடு கட்டுவதுஎன்பது மிகவும் சவாலான ஒன்று.

    அந்தக் குறையை போக்க நகர்ப்புற வழி விட மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து குடியிரு ப்புகளை பெற தகுதியான நபர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவகாசம் முடிந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை இன்னும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×