என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேவாரத்தில் கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவிக்கு அடி,உதை -கணவர் கைது
- கள்ளக்காதலை தட்டிகேட்ட மனைவியை கணவர் மற்றும் கள்ளக்காதலி ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஷோபனா(42). இவர் வேலூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் தங்கபாண்டியன் மற்றும் குழந்தைகளுடன் தேவாரத்தில் வசித்து வருகிறார். இதனிடையே தங்கபாண்டியனுக்கும் , கேரளமாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சதீஸ் மனைவி ரமா(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
ஷோபனா வேலை விசயமாக வெளியூரில் இருப்பதால் ரமாவுடன் தங்கபாண்டியன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதுகுறித்து ஷோபனாவுக்கு தெரியவரவே உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தங்கபாண்டியனை வரவழைத்து இனிமேல் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதன்பிறகும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனை தட்டிகேட்ட ஷோபனாவை தங்கபாண்டியன் மற்றும் ரமா ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர். படுகாயமடைந்த ஷோபனா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ேசர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குபதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்தார்.






